ஊட்டி : ஊட்டி அருகே கல்லட்டி வேளாங்கண்ணி கெபி திருவிழா வரும் 10ம் தேதி துவங்குகிறது.
ஊட்டி அருகே கல்லட்டி பகுதியில் வேளாங்கண்ணி கெபி அமைந்துள்ளது. இங்கு திருவிழா வரும் 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் தினமும் நவநாள் திருப்பலி நடக்கிறது. 18ம் தேதி திருவிழா திருப்பலி 10.30 மணிக்கு சிறப்பு கூட்டு பாடற்திருப்பலி, பகல் 12.30 மணிக்கு அன்னையின் ஆடம்பர தேர்பவனி, பகல் 1.30 மணிக்கு அன்பின் விருந்து, மதியம் 3.00 மணிக்கு இன்னிசை கச்சேரி, மாலை 6.00 மணிக்கு திருப்பலி நடக்கிறது.


