/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/ஜெயங்கொண்டம் அருகே போலி கையெழுத்து மூலம் நில மோசடி: இருவர் கைதுஜெயங்கொண்டம் அருகே போலி கையெழுத்து மூலம் நில மோசடி: இருவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே போலி கையெழுத்து மூலம் நில மோசடி: இருவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே போலி கையெழுத்து மூலம் நில மோசடி: இருவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே போலி கையெழுத்து மூலம் நில மோசடி: இருவர் கைது
ADDED : செப் 08, 2011 01:28 AM
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே போலி கையெழுத்து மூலம் நில மோசடி செய்த
இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரியலூர் எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட
அறிக்கை:அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, புதுச்சாவடி கிராமத்தைச்
சேர்ந்த ரவி மனைவி தமிழரசி. தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலத்தில்
வசிக்கும் தமிழரசியின் கணவருக்கு சொந்தமாக, புதுச்சாவடி கிராமத்தில் 18
செண்ட் நிலம் உள்ளது.தமிழரசி வெளியூரில் வசிக்கும் நிலையில், புதுச்சாவடி
கிராமத்தில் வசிக்கும் தமிழரசி கொழுந்தனார் வெங்கடேசன்(35), அதே
ஊரைச்சேர்ந்த துரைராஜ்(45), ஆறுமுகம், வேம்புக்குடி கிராமத்தைச் சேர்ந்த
வீரமுத்து உள்ளிட்ட நால்வரும் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டனர்.ஆள்
மாறாட்டம் மற்றும் போலி கையெழுத்து மூலம் புதிய பத்திரம் தயார் செய்து,
வெங்கடேசன் தனது அண்ணன் ரவியின் பெயரில் உள்ள 18 செண்ட் நிலத்தை, துரைராஜ்
என்பவருக்கு கடந்த ஆண்டு விற்பனை செய்தார்.இதையறிந்த தமிழரசி, அரியலூர்
எஸ்.பி., கண்ணப்பன் மூலம், நில மோசடி மற்றும் ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்பு
பிரிவில் புகார் கொடுத்தார்.
அரியலூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு
டி.எஸ்.பி., கோவிந்தராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் மயில்சாமி உள்ளிட்ட
போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.இதையடுத்து தனது சகோதரனுக்கு சொந்தமான,
ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக விற்பனை செய்த, புதுச்சாவடி
கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், அதை விலைக்கு வாங்கிய துரைராஜ் உள்ளிட்ட
இரண்டு பேரையும், நேற்று முன்தினம் ஜெயங்கொண்டத்தில் போலீஸார் கைது
செய்தனர்.இதற்கு உடந்தையாக இருந்த ஆறுமுகம், வீரமுத்து உள்ளிட்ட இரண்டு
பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.


