ADDED : செப் 08, 2011 01:53 AM
கோவை : கோவை மாவட்ட உயர்நிலை, மெட்ரிக், மேல்நிலை பள்ளிகள் விளையாட்டு கழகம் மற்றும் சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் கிழக்கு குறுமைய பள்ளி மாணவியருக்கான தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.பி.எஸ்.
ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளி அதிக புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். 14 வயது பிரிவில் சி.ஆர்.ஆர்.,பள்ளியும், 17, 19 வயது பிரிவில் பி.எஸ்.ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளியும் தனியே அதிக புள்ளிகள் எடுத்தன. கிழக்கு குறுமையம் 28 பள்ளிகளை சேர்ந்த 531 மாணவியர் பல்வேறு பிரிவு தடகள போட்டிகளில் பங்கேற்றனர். இதில் ஜூனியர் 14 வயது பிரிவில் சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் பள்ளி நந்தினியும், சீனியர் 17 வயது பிரிவில் பி.எஸ்.ஜி.ஜி., கன்யாகுருகுலம் பள்ளி பாலப்பிரியாவும், சூப்பர் சீனியர் 19 வயது பிரிவில் சி.ஆர்.ஆர்.,பள்ளி வினோஷா, பி.எஸ்.ஜி.ஜி.,கன்யா குருகுலம் பள்ளி சவுந்தரவள்ளி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் பள்ளி செயலாளர் ஜெகதீசன் பரிசு வழங்கினார். பள்ளி தாளாளர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயசாந்தா வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.


