/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடல் இறக்க சர்வதேச மாநாடு கோவையில் 3 நாள் நடக்கிறதுகுடல் இறக்க சர்வதேச மாநாடு கோவையில் 3 நாள் நடக்கிறது
குடல் இறக்க சர்வதேச மாநாடு கோவையில் 3 நாள் நடக்கிறது
குடல் இறக்க சர்வதேச மாநாடு கோவையில் 3 நாள் நடக்கிறது
குடல் இறக்க சர்வதேச மாநாடு கோவையில் 3 நாள் நடக்கிறது
ADDED : செப் 08, 2011 01:59 AM
கோவை : 'குடல் இறக்க சர்வதேச மாநாடு' ஜெம் மருத்துவமனை சார்பில் கோவையில் மூன்று நாள் நடக்கிறது.
ஜெம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பழனிவேலு கூறியதாவது: குடல் இறக்க பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற வருவதில்லை. முற்றிய நிலையில் வலி ஏற்பட்டு, ரத்த ஓட்டம் பாதித்த பின்னரே வருகின்றனர். இதுபோன்ற விளைவுகளை தவிர்க்க ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதே சிறந்தது. லேப்ராஸ்கோப் முறையில் வலியில்லா சிகிச்சை பெறலாம். சிகிச்சை முடிந்த ஒரிரு நாட்களில் அன்றாட பணிகளில் ஈடுபடலாம்; ஒய்வெடுக்க வேண்டிய அவசியமில்லை. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 18ம் தேதி, இலவச ஆலோசனை முகாம் நடக்கிறது. இதில் கிராமப்புற மற்றும் ஏழை மக்களுக்கு இலவச பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்படும். ஜெம் மருத்துவமனை சார்பில் 'குடல் இறக்க சர்வதேச மாநாடு' வரும் 22, 23 மற்றும் 24ம் தேதிகளில், லீ மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது. லேப்ராஸ்கோப் குடல் இறக்க சிகிச்சை முறை, செயல் விளக்கம் ஆகியவை இடம்பெறும். இந்த மாநாட்டில் 750 க்கும் மேற்பட்ட லேப்ராஸ்கோப் சிகிச்சை நிபுணர்கள், பயிற்சி டாக்டர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, டாக்டர் பழனிவேலு தெரிவித்தார்.


