Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பஸ் ஸ்டாண்ட் அருகே குழி: விபத்து அபாயம்

பஸ் ஸ்டாண்ட் அருகே குழி: விபத்து அபாயம்

பஸ் ஸ்டாண்ட் அருகே குழி: விபத்து அபாயம்

பஸ் ஸ்டாண்ட் அருகே குழி: விபத்து அபாயம்

ADDED : செப் 08, 2011 02:00 AM


Google News

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் அருகே ஏற்பட்டுள்ள பாதாளக்குழி மூடப்படாததால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட், பேரூராட்சி வணிக வளாகம், கோவை டவுன் பஸ் ஸ்டாப், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற இடங்களில் ரோடு அரிக்கப்பட்டு, பாதாள குழியாக மாறியுள்ளது. இதனை மூடுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் இக்குழியில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் அருகே இருப்பதால், வாகனங்கள் வந்து திரும்பி பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள குழியின் பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. மழைக்காலங்களில் இக்குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வானங்களுக்கு குழி இருப்பது தெரியாமல், குழியில் வந்து சிக்கிவிடுகின்றனர். இதனால், விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இக்குழிகளை நிரந்தரமாக மூட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us