Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பேரணி

மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பேரணி

மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பேரணி

மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பேரணி

ADDED : செப் 08, 2011 02:05 AM


Google News

பொள்ளாச்சி : கோவை மாவட்ட எஸ்.எஸ்.ஏ., மற்றும் அவினாசிலிங்கம் பல்கலை சார்பில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாற்று திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பேரணி நடந்தது.

கோவை மாவட்டத்தில், மாற்று திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பேரணி நடத்த வேண்டும் என, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு ஒன்றியம் சார்பில் பேரணி நடக்கிறது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., சார்பில் வட்டார வள மைய அலுவலகத்தில் நடந்த பேரணி துவக்க விழாவில், பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் பேரணியை துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆனந்தி தலைமை வகித்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கரும்பாசலம் முன்னிலை வகித்தார். நேதாஜி ரோட்டில் துவங்கிய பேரணி நகராட்சி அலுவலகம் ரோடு, பாலக்காடு ரோடு வழியாக வடக்கு ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. இதில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், மாற்று திறனாளி மாணவர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் சக்திவேல், ராஜேஸ்வரி, லதா, அனிதா, கவுதமி, மைய பாதுகாப்பு ஆசிரியை பத்மாவதி உட்பட பலர் பங்கேற்றனர். இதில், 'மாற்று திறனாளி மாணவர்களுக்கும் சிறந்த கல்வி கற்பிக்கும் வகையில், பள்ளிகளில் சேர்க்க வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஏற்ற வசதிகளை செய்வதுடன், அரசும் பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது' என, வலியுறுத்தப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us