Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போடிபட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

போடிபட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

போடிபட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

போடிபட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ADDED : செப் 08, 2011 02:15 AM


Google News

உடுமலை : உடுமலை அருகே போடிப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் ஆடு வழங்கும் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில், பைலட் ஊராட்சியாக போடிபட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக கடந்த மாதம் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், 30 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 2ம் கட்டமாக 129 பேருக்கு ஆடு வழங்கும் பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெற நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஊராட்சி தலைவர் மல்லிகா தலைமை வகித்தார். கூட்டத்தில், இரண்டாம் கட்டமாக 129 பேருக்கு ஆடு வழங்குவதற்காக பயனாளிகள் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், 'கடந்த முறை போன்று, பயனாளிகள் பட்டியலை காட்டுங்கள்; இல்லையெனில் கலைந்து செல்ல மாட்டோம்,' என கூறினர். இதற்கு அதிகாரிகள்,' மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே பட்டியல் காண்பிக்கப்படும்,' என்றனர். துணைத்தலைவர் விஜயலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதிதிராவிடர் நலம்) சிவகுருநாதன், கால்நடைத்துறை அதிகாரிகள், பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us