/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பச்சிளம் குழந்தைகளை காக்க பிரத்யேக ஆம்புலன்ஸ் ஒரு டாக்டர், மூன்று செவிலியர்களுடன் தயாராகிறதுபச்சிளம் குழந்தைகளை காக்க பிரத்யேக ஆம்புலன்ஸ் ஒரு டாக்டர், மூன்று செவிலியர்களுடன் தயாராகிறது
பச்சிளம் குழந்தைகளை காக்க பிரத்யேக ஆம்புலன்ஸ் ஒரு டாக்டர், மூன்று செவிலியர்களுடன் தயாராகிறது
பச்சிளம் குழந்தைகளை காக்க பிரத்யேக ஆம்புலன்ஸ் ஒரு டாக்டர், மூன்று செவிலியர்களுடன் தயாராகிறது
பச்சிளம் குழந்தைகளை காக்க பிரத்யேக ஆம்புலன்ஸ் ஒரு டாக்டர், மூன்று செவிலியர்களுடன் தயாராகிறது
ADDED : செப் 08, 2011 02:16 AM
திருப்பூர் : பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை தடுக்க, ஒரு குழந்தை நல மருத்துவர், மூன்று செவிலியர்களுடன் பிரத்யேகமாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் மூன்று மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும்.விபத்து ஏற்பட்டாலோ அல்லது அவசர சிகிச்சை தேவைப்பட்டாலோ, 108 என்ற எண்ணுள்ள ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள் ளது. இச்சேவையை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, பிரசவத்தின் போது ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை தடுக்க, ஒரு குழந்தை நல மருத்துவர், மூன்று செவிலியர்களுடன் பிரத்யேகமாக 108 ஆம்புலன்ஸ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:பிரசவ வலி, விஷக்கடி, விபத்து, தற்கொலை, நெஞ்சுவலி போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளில் இருந்து பலரை 108 ஆம்புலன்ஸ் மீட்டு காப்பாற்றி வருகிறது. எங்களது நிறுவனத்தின் கடந்த கால நடவடிக்கைகள் அரசுக்கு அறிக்கையாக அனுப்பப் பட்டது. அதை ஆய்வு செய்த மருத் துவத்துறை அதிகாரிகள், பிரசவ வலிக்காக அதிக அளவில் 108 ஆம் புலன்சை மக்கள் அழைக்கின்றனர்.பிரசவம் மற்றும் குழந்தைகள் நலத்துக்காக பிரத்யேகமாக இலவச ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டும் என கூறினர். மூன்றாண்டுக்கு மேலாக 108ல் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்கள், மூத்த மருத்துவர்கள் குழுவை அழைத்து, பிறக்கும் குழந்தை, தாயை காக்கும் வகையில் எப்படி ஆம்புலன்சை வடிவமைக்கலாம் என ஆலோசிக் கப்பட்டது.மருத்துவமனையில் இருப்பதை போல் பச்சிளம் குழந்தைகளை காக்க 'இன்குபேட்டர்', 'வென்டிலேட்டர்' வெப்பநிலை அறியும் மானிட்டர், மிருதுவான ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்களுடன், மின் ஒயர்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆம்புலன்ஸ் வடிவமைக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அக்கருவிகளை பயன்படுத்த, ஆம்புலன்சில் பணியாற்றும் டிரைவர் மற்றும் செவிலியர்களுக்கு தெரியாது. இதற்கென தனி பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆம்புலன்சுக்கும் தலா ஒரு குழந்தை நல மருத்துவர், செவிலியர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, பச்சிளம் குழந்தைகளை காக்கும் இலவச ஆம்புலன்ஸில் ஒரு டாக்டர், மூன்று செவிலியர், ஒரு ஓட்டுனர் என ஐந்து பேர் பணியில் அமர்த்தப்படுவர். முதல்கட்டமாக, சென்னையில் இத்திட்டம் இரண்டு ஆம்புலன்ஸ் களுடன் துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அடுத்த மூன்று மாதத்துக்குள் கொண்டு வர ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், மாவட்டம் வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வழங்கப்படும், என்றார்.


