ADDED : செப் 08, 2011 02:43 AM
நாமக்கல்: ராசிபுரம் அருகே சிறுவனை கொலை செய்த வாலிபரை, போலீஸார் கைது
செய்தனர்.ராசிபுரம், கட்டநாயக்கன்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெயமால்
(40). இவருக்கு கணவர் இல்லை. முத்துகாளிப்பட்டியில் உள்ள ஒரு விவசாய
தோட்டத்தில் ஜெயமால் கூலி வேலை செய்து, பேரன் ராகுலுடன் வசித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடன், ஜெயமால் கள்ளத்தொடர்பு
வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, ஜெயமாலை ஆசைக்கு வரும்படி
சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். பேரன் இருப்பதால் வேண்டாம் என, அவர்
கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், ஆசை நிறைவேற தடையாக இருந்த
ராகுலை, கொலை செய்து, தோட்டத்தில் புதைத்துள்ளார்.குழந்தை காணாததை கண்டு,
ஜெயமால் ராசிபுரம் போலீஸில் புகார் செய்தார். சந்தேகத்தின் பேரில்
சுப்பிரமணியை விசாரித்த போது, குழந்தையை கொன்றது சுப்பிரமணியன்தான் என
தெரியவந்தது. இன்று, புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையை போலீஸார்
மீட்கின்றனர்.
சுப்பிரமணியனை கைது செய்து ராசிபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


