Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/60 தெருநாய்களுக்கு கருத்தடைகுமாரபாளையம் நகராட்சி அதிரடி

60 தெருநாய்களுக்கு கருத்தடைகுமாரபாளையம் நகராட்சி அதிரடி

60 தெருநாய்களுக்கு கருத்தடைகுமாரபாளையம் நகராட்சி அதிரடி

60 தெருநாய்களுக்கு கருத்தடைகுமாரபாளையம் நகராட்சி அதிரடி

ADDED : செப் 08, 2011 02:45 AM


Google News
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திரிந்த தெருநாய்கள் பிடித்து கருத்தடை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று, 60 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.குமாரபாளையம் நகராட்சியில், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. அதையடுத்து, நகராட்சிக் கமிஷனர் சந்திரசேகர் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள அகில இந்திய பிராணிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கால்நடை டாக்டர் ஆல்வின் தலைமையில், நகராட்சியில் திரிந்த தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.முதல் நாளான நேற்று, 60 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, சின்னப்பநாயக்கன்பாளையத்தில் காலியாக உள்ள நகராட்சி பள்ளிக் கட்டிடத்தில் வைத்து கருத்தடை செய்யப்பட்டது.இந்தப் பணி ஒருவார காலம் மேற்கொள்ளப்பட உள்ளது. தவிர, வீட்டு நாய்களுக்கும் இங்கு கருத்தடை செய்து கொள்ளலாம் என, நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சேர்மன் சேகர், சுகாதார ஆய்வாளர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us