/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரயில்வே டவர் வேகன்விழுப்புரத்தில் துவக்கம்ரயில்வே டவர் வேகன்விழுப்புரத்தில் துவக்கம்
ரயில்வே டவர் வேகன்விழுப்புரத்தில் துவக்கம்
ரயில்வே டவர் வேகன்விழுப்புரத்தில் துவக்கம்
ரயில்வே டவர் வேகன்விழுப்புரத்தில் துவக்கம்
ADDED : செப் 08, 2011 03:36 AM
விழுப்புரம்:விழுப்புரம் பகுதிகளில் ஓ.எச்.இ.,( ஓவர் ஹெட் எக்யூப்மென்ட்)
லைனில் பழுது ஏற்பட்டால் விரைவில் சீரமைக்க ரயில்வே டவர் வேகன் துவக்க விழா
நடந்தது.திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் விழுப்புரம் மற்றும் சுற்று
பகுதிகளில் ஓ.எச். இ., (ஓவர் ஹெட் எக்யூப்மென்ட்) லைனில் பழுது ஏற்பட்டால்
விரைவில் சீரமைக்கும் பணிகளுக்காக 1.20 கோடி ரூபாய் மதிப்பில் 'டவர்
வேகன்' வழங்கப்பட்டுள்ளது. இதனை இயக்கி வைக்கும் விழா விழப்புரம் ரயில்
நிலையத்தில் நேற்று காலை நடந்தது.சிறப்பு பூஜைக்கு பின் 'டவர் வேகனை' கோட்ட
மேலாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கி இயக்கி வைத்தார்.
முதன்மை கோட்ட
எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஜெயகிருஷ்ணன், உதவி கோட்ட எலக்ட்ரிக்கல்
பொறியாளர் சாந்த ஜெயகுமார், உதவி கோட்ட பொறியாளர் பாஸ்கர், பகுதி பொறியாளர்
ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோட்ட மேலாளர் வைத்திலிங்கம் கூறுகையில்,
'தற்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாகவும், விருத்தாசலம்
மார்க்கமாகவும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. வேலூர் மார்க்கத்திலும்
மின் மயமாக்கும் பணிகள் நடக்கிறது. மின்சார லைனில் பழுது ஏற்பட்டால் உடனே
சரி செய்ய முடியவில்லை. இன்ஜின் மீது 'ஸ்டூல்' போட்டு ஏறி நின்று பழுது
பார்க்கும் நிலை இருந்தது.இதனை தவிர்க்க 1.20 கோடி ரூபாய் மதிப்பில் 'டவர்
வேகன்' வழங்கப்பட்டுள்ளது. இனி மின்சார லைனில் பழுது ஏற்பட்டால் உடனே
சீரமைக்க முடியும். பிற இடங்களில் பழுது ஏற்பட்டாலும் விரைவில் அனுப்பி
சீரமைக்க முடியும்' என்றார்.


