/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஜெயேந்திரா, எஸ்.ஜே.என்.,சாம்பியன்பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஜெயேந்திரா, எஸ்.ஜே.என்.,சாம்பியன்
பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஜெயேந்திரா, எஸ்.ஜே.என்.,சாம்பியன்
பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஜெயேந்திரா, எஸ்.ஜே.என்.,சாம்பியன்
பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஜெயேந்திரா, எஸ்.ஜே.என்.,சாம்பியன்
ADDED : செப் 08, 2011 10:23 PM
கோவை : மாவட்ட அளவில் பள்ளி மாணவருக்கான கிரிக்கெட் போட்டியில், 16 வயது
பிரிவில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி பள்ளியும், 14 வயது பிரிவில் எஸ்.ஜே.என்.,
பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்
சார்பில் 2010-'11க்கான மாவட்ட அளவில் பள்ளி சிறுவருக்கான கிரிக்கெட்
போட்டிகள் நடந்தன. கிரிதாரி பிரசாத் கோப்பைக்கான 16 வயது பிரிவில், 20
பள்ளிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா
மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதலிடமும், ஆர்.கே.எஸ்., கல்விநிலையம் மேல்நிலை
பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. சிறந்த பேட்ஸ்மேனாக ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி
வீரர் காட்வின் ருபேஷ், சிறந்த பவுலராக ஆர்.கே.எஸ்.,கல்விநிலையப் பள்ளி
அரவிந்த் தேர்வு பெற்றனர். கோவை மெட்ரோ பாலிஸ் ரோட்டரி கிளப் கோப்பைக்கான
14 வயது பிரிவில் 17 பள்ளிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், கல்லாறு
சச்சிதானந்தா ஜோதிநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், மணி
மேல்நிலைப் பள்ளி இரண்டாவது இடமும் பெற்றன. இதே பிரிவில் மணிமேல்நிலைப்
பள்ளியின் சஞ்சய் ராஜ், சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த பவுலராக கபின்
சஞ்சயும் தேர்வு பெற்றனர்.


