Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாவட்ட கிரிக்கெட் போட்டி ரெய்டர்ஸ் அகாடமி சாம்பியன்

மாவட்ட கிரிக்கெட் போட்டி ரெய்டர்ஸ் அகாடமி சாம்பியன்

மாவட்ட கிரிக்கெட் போட்டி ரெய்டர்ஸ் அகாடமி சாம்பியன்

மாவட்ட கிரிக்கெட் போட்டி ரெய்டர்ஸ் அகாடமி சாம்பியன்

ADDED : செப் 08, 2011 10:23 PM


Google News
கோவை : மாவட்ட கிரிக்கெட் சங்க மூன்றாவது டிவிஷன் லீக் போட்டியில், கோயம்புத்தூர் ரெய்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மூன்றாவது டிவிஷன் 'செர்வால் கோப்பை'க்கான கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது. இதில், எட்டு அணிகள் பங்கேற்றன. அதிக வெற்றி புள்ளிகளுடன் கோவை ரெய்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி முதலிடமும், எஸ்.என்.ஆர்.,சன்ஸ் கல்லூரி கிரிக்கெட் கிளப் இரண்டாமிடமும் பெற்றன. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி கிரிக்கெட் கிளப் வீரர் ரஜீல் அப்துல்ரஹ்மான் சிறந்த பேட்ஸ்மேனாகவும், ரெயின்போ 1972 எம்.எம்.கிரிக்கெட் கிளப் வீரர் ஹரிகரன் சிறந்த பவுலராகவும், கோவை ரெய்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி வீரர் சந்திர பிரகாஷ் சிறந்த விக்கெட் கீப்பராகவும் தேர்வு பெற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us