/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகராட்சி பகுதியில் பாலிதீன் பை பயன்படுத்த தடைநகராட்சி பகுதியில் பாலிதீன் பை பயன்படுத்த தடை
நகராட்சி பகுதியில் பாலிதீன் பை பயன்படுத்த தடை
நகராட்சி பகுதியில் பாலிதீன் பை பயன்படுத்த தடை
நகராட்சி பகுதியில் பாலிதீன் பை பயன்படுத்த தடை
ADDED : செப் 08, 2011 10:30 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்த
தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண்
அறிக்கை: பொள்ளாச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும்
பிளாஸ்டிக் விதிகளின் படி பூமியின் இயற்கை வளத்தையும், மக்களின் சுகாதாரமான
வாழ்க்கை தரத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக்
பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் (பாலிதீன் பைகள்)
பயன்படுத்துவோர் மீது நகராட்சி நிர்வாகம் கைப்பற்றுதல், அபராத தொகை வசூல்
செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை
பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது நீதிமன்றம் மூலம் மேல் நடவடிக்கை
எடுக்கப்படும். பொள்ளாச்சி நகரின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பொதுமக்களின்
கடமை என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது, பிளாஸ்டிக் பைகளில்
கொடுத்தால், அதை தவிர்த்து, காகித பையில் அல்லது துணிப்பையில் வழங்க
வலியுறுத்த வேண்டும். மேலும், வீடுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை
தெருக்களில் வீசாமல், ஒன்று சேர்த்து வைத்து துப்புரவு பணியாளர்கள் வரும்
போது ஒப்படைக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் அறிவிக்கும் நாட்களில்,
பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள், பொதுமக்கள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அறிவிக்கப்படும்.
அன்று, வீடுகளிலும், தெருக்களிலும் இருக்கும் பிளாஸ்டிக் பைகளை சேகரித்து
நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு அனைத்து
தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இனிமேலும், வணிக நிறுவனங்களில்
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வணிக
நிறுவனங்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பின்,
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் நீதிமன்றம் மூலம் மேல் நடவடிக்கை
எடுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


