/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மழை பாதிப்பா: 1077ல் தொடர்பு கொள்ளலாம்மழை பாதிப்பா: 1077ல் தொடர்பு கொள்ளலாம்
மழை பாதிப்பா: 1077ல் தொடர்பு கொள்ளலாம்
மழை பாதிப்பா: 1077ல் தொடர்பு கொள்ளலாம்
மழை பாதிப்பா: 1077ல் தொடர்பு கொள்ளலாம்
ADDED : செப் 08, 2011 10:30 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படுவோர் இலவச எண் 1077ஐ தொடர்பு கொள்ளலாம்.
ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்ராய் பேசியதாவது: வருவாய் துறையினர், பருவமழை குறித்த விபரங்களை தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். மழையால் பாதித்தவர்கள் 1077 என்ற இலவச போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு மற்றும் வருவாய் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும். மழை நீர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்யும் வகையில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.


