/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்டத்தில் 10 இடங்களில் "செக்போஸ்ட்' இரவு நேரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்புமாவட்டத்தில் 10 இடங்களில் "செக்போஸ்ட்' இரவு நேரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
மாவட்டத்தில் 10 இடங்களில் "செக்போஸ்ட்' இரவு நேரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
மாவட்டத்தில் 10 இடங்களில் "செக்போஸ்ட்' இரவு நேரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
மாவட்டத்தில் 10 இடங்களில் "செக்போஸ்ட்' இரவு நேரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ADDED : செப் 08, 2011 11:44 PM
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் 'செக்போஸ்ட்' அமைத்து இரவு நேரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எஸ்.பி., பகலவன் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு 10 இடங்களில் 'செக் போஸ்ட்' அமைத்து இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி பண்ருட்டி பகுதியில் ராசாப்பாளையம், கொள்ளுக்காரன்குட்டை, சிதம்பரத்தில் வண்டிகேட், வல்லம்படுகை, விருத்தாசலத்தில் கருவேப்பிலங்குறிச்சி கூட்ரோடு, வேப்பூரில் கண்டமத்தான், சேத்தியாதோப்பு கூட்ரோடு, சோழதரத்தில் மா.மங்கலம், ராமநத்தம் கூட்ரோடு, கடலூரில் திருவந்திபுரம் ஜங்ஷன் உள்ளிட்ட 10 இடங்களில் 'செக் போஸ்ட்கள்' அமைக்கப்பட்டு, ஒவ்வொரு செக்போஸ்டிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர், மூன்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள், சாராயக் கடத்தல், வழிபறியில் ஈடுபடுவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். தீவிர வாகன சோதனை மேற்கொள் ளப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட அனைத்து பஸ் நிலையங்களிலும் இரவு நேரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். ஒவ்வொரு டி.எஸ்.பி., க்களும் 10 பேர் கொண்ட அதிரடி படையை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


