/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழுதூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்தொழுதூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்
தொழுதூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்
தொழுதூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்
தொழுதூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 08, 2011 11:44 PM
விருத்தாசலம் : தொழுதூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து வாழ்ந்துகாட்டுவோம் திட்ட மாவட்ட மேலாளர் நித்தியானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விருத்தாசலம் அடுத்த தொழுதூர் சமுதாய கூடத்தில் புது வாழ்வு திட்டத்தின் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று ( 9ம் தேதி) நடக்கிறது. இதில் சென்னை மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த நோக்கியா, டி.வி.எஸ்., உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கின்றனர். 8, 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ள மோ, டிகிரி படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். ரூபாய் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.


