/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கலெக்டர் அதிரடி சோதனையில் "திடுக்' 5 ஆசிரியர்களுக்கு "17ஏ' நோட்டீஸ்கலெக்டர் அதிரடி சோதனையில் "திடுக்' 5 ஆசிரியர்களுக்கு "17ஏ' நோட்டீஸ்
கலெக்டர் அதிரடி சோதனையில் "திடுக்' 5 ஆசிரியர்களுக்கு "17ஏ' நோட்டீஸ்
கலெக்டர் அதிரடி சோதனையில் "திடுக்' 5 ஆசிரியர்களுக்கு "17ஏ' நோட்டீஸ்
கலெக்டர் அதிரடி சோதனையில் "திடுக்' 5 ஆசிரியர்களுக்கு "17ஏ' நோட்டீஸ்
ADDED : செப் 10, 2011 03:16 AM
கடலூர் : பணி நேரத்தில் பள்ளியில் இல்லாத 4 ஆசிரியர்கள் மற்றும் வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்காத தலைமை ஆசிரியருக்கு '17ஏ' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை தினமும் காலை 10 மணிக்குள் எஸ்.எம்.எஸ்., மூலம் ஆன் லைனில் பதிவு செய்ய கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டார்.இந்நிலையில் கடந்த 7ம் தேதி பகல் 12 மணிக்கு கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் அமுதவல்லி திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததில் முறையான அறிவிப்பின்றி நான்கு ஆசிரியர்கள் பணிக்கு வராதது தெரியவந்தது.பணிக்கு வராத ஆசிரியர்கள் ரெஜி, காமராஜ், ஜெயந்தி, ஜோதிமணி மற்றும் வருகைப்பதிவேட்டை முறையாக பராமரிக்காத தலைமை ஆசிரியர் கனகசபை ஆகியோருக்கு விளக்கம் கேட்டு '17ஏ' நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் விளக்கம் பெறப்பட்ட பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.


