Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் கொலை

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் கொலை

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் கொலை

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் கொலை

ADDED : செப் 10, 2011 03:53 AM


Google News

கரூர்: 'கரூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த மினி பஸ் டிரைவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்' என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த வீரமலை என்பவரது மகன் சந்திரசேகரன் (26) மினி பஸ் டிவைராக இருந்தார்.

இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள முள் காட்டில் அரை நிர்வாண நிலையில், மூக்கில் ரத்தம் வழிந்தப்படி இறந்து கிடந்தார். போலீஸார் முதலில் 'சந்தேக மரணம்' என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் 'கரூர் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் சந்திரசேகரன், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்' என தெரிய வந்தது. இதையடுத்து பசுபதிபாளையம் போலீஸார் சந்தேக மரணத்தை கொலை வழக்காக நேற்று முன்தினம் இரவு மாற்றினர்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us