Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் 4,438 வார்டுகளுக்கு 3,492 பூத்களில் ஓட்டுப்பதிவு

ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் 4,438 வார்டுகளுக்கு 3,492 பூத்களில் ஓட்டுப்பதிவு

ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் 4,438 வார்டுகளுக்கு 3,492 பூத்களில் ஓட்டுப்பதிவு

ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் 4,438 வார்டுகளுக்கு 3,492 பூத்களில் ஓட்டுப்பதிவு

ADDED : செப் 11, 2011 12:43 AM


Google News

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் ஊரக, உள்ளாட்சி தேர்தலில் 4,438 வார்டுகளுக்கு 3,492 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் கடைசியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் 15ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. கட்சியினரும் போட்டி போட்டு கொண்டு மனுக்களை அளித்து வருகின்றனர்.



ஊரக உள்ளாட்சி:>நெல்லை மாவட்டத்தை பொறுத்துவரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 3,636 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்களுக்கு 5, பெண் வாக்காளர்களுக்கு 5, இரு பாலருக்கும் 2,214 ஓட்டுச்சாவடிகள் உட்பட மொத்தம் 2,224 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



மாநகராட்சி: >நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்களுக்கு 73, பெண் வாக்காளர்களுக்கு 73, இரு பாலருக்கு 207 ஓட்டுச் சாவடிகள் உட்பட மொத்தம் 353 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



நகராட்சி: >மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் ஆண் வாக்காளர்களுக்கு 72, பெண் வாக்காளர்களுக்கு 72, இரு பாலருக்கு 86 உட்பட மொத்தம் 230 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் மொத்தம் 153 வார்டுகள் உள்ளன.



3ம் நிலை நகராட்சி: >மாவட்டத்தில் 3ம் நிலை நகராட்சிகளில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. இதில் ஆண்களுக்கு 37, பெண்களுக்கு 37, இரு பாலருக்கு 11 உட்பட மொத்தம் 85 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



டவுன் பஞ்.,: >மாவட்டத்தில் டவுன் பஞ்., பகுதிகளில் மொத்தம் 572 வார்டுகள் உள்ளன. இதில் ஆண்களக்கு 27, பெண்களுக்கு 27, இரு பாலருக்கு 546 உட்பட மொத்தம் 600 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் ஆண்களுக்கு 214, பெண்களுக்கு 214, இரு பாலருக்கு 3,064 உட்பட மொத்தம் 3,492 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச் சாவடிகளில் மொத்தம் 4,438 வார்டுகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாவட்டத்தில் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us