Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/குமரி மாவட்ட நவராத்திரி விக்ரகங்கள் வரும் 24ல் பவனியாக கேரளா பயணம்

குமரி மாவட்ட நவராத்திரி விக்ரகங்கள் வரும் 24ல் பவனியாக கேரளா பயணம்

குமரி மாவட்ட நவராத்திரி விக்ரகங்கள் வரும் 24ல் பவனியாக கேரளா பயணம்

குமரி மாவட்ட நவராத்திரி விக்ரகங்கள் வரும் 24ல் பவனியாக கேரளா பயணம்

ADDED : செப் 13, 2011 12:13 AM


Google News

மார்த்தாண்டம் : நவராத்திரி விழாவை முன்னிட்டு தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் நவராத்திரி பவனி வரும் 24ம் தேதி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு பயணமாகிறது.

திருவிதாங்கூர் அரசசபையில் கவிஞராக இருந்தவர் தமிழ்புலவர் கம்பர். மன்னருக்கும், கம்பருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கம்பர் அரண்மனையில் இருந்து வெளியேறினார். மாறுவேடம் தரித்து வந்த கம்பர் வள்ளியூர் அரசசபையில் கவிஞராக பொறுப்பேற்றார். ஆனால் மாறுவேடம் தரித்து வந்திருப்பது கம்பர் என்பது வள்ளியூர் மன்னருக்கு தெரியவரவே அங்கிருந்தும் கம்பர் வெளியேறினார். அவ்வாறு செல்லும் போது தான் குலதெய்வமாக வழிப்பட்டு வந்த சரஸ்வதி தேவி சிலையை அங்கேயே விட்டுவிட்டு சென்றார். வள்ளியூர் மன்னருக்கும், திருவிதாங்கூர் மன்னருக்கும் இடையே ஏற்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சரஸ்வதிதேவி விக்ரகம் பத்மனாபபுரம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டு தேவாரகட்டு கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அன்று முதல் நவராத்திரி விழா பத்மனாபபுரத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாளடைவில் நிர்வாக வசதிக்காக திருவிதாங்கூர் தலைநகர் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. எனினும் சரஸ்வதிதேவி விக்ரகம் பவனியாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. மன்னர் ஆட்சிக்கு பின்னரும் இந்த விழா தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையால் நவராத்திரி டிரஸ்ட் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி பவனி வரும் 24ம் தேதி பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படுகிறது. இதற்கு முன்னதாக பத்மனாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னர் உடைவாள் எடுத்து கொடுக்கும் சடங்கு நடக்கிறது. அரண்மனை அதிகாரி வாளை எடுத்து கொடுக்க திருவிதாங்கூர் மன்னர் பிரதிநிதி அதனை பெற்றுகொள்வார். தேவசம்போர்டு ஊழியர் ஒருவரும் வாளுடன் பவனியில் முன் செல்வார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சரஸ்வதிதேவி விக்ரகம் போலீஸ் மரியாதையுடன் மேளதாளம் முழங்க, தாலப்பொலி ஏந்தி, சிறுமியர் மலர் தூவ யானை மீது பவனியாக எடுத்து செல்லப்படும். அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்உதித்த நங்கை விக்ரகங்கள் எடுத்து செல்லப்படும். அழகியமண்டபம், மார்த்தாண்டம், குழித்துறை என வழிநெடுக பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் குழித்துறை ஐயப்பா சேவா சங்க கூட்டம் பொதுச்செயலாளர் அழகப்பன் தலைமையில் நடந்தது. செல்வராஜ், சுரேந்திரன் நாயர், குழித்துறை மகாதேவர் கோயில் சம்ரஷ்ண சமிதி டிரஸ்ட் செயலாளர் சதீஷ், குறும்பேற்றி கோயில் நிர்வாகி செல்வராஜ், சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் நவராத்திரி விக்ரகங்களுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சென்று சுவாமியார்மடத்தில் இருந்து வரவேற்பு அளிக்கப்படும். இதை போல் வரும் 24ம் தேதி வரும் விக்ரகங்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us