Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/இரட்டை கொலை வழக்கு மேலும் இருவர் கைது

இரட்டை கொலை வழக்கு மேலும் இருவர் கைது

இரட்டை கொலை வழக்கு மேலும் இருவர் கைது

இரட்டை கொலை வழக்கு மேலும் இருவர் கைது

ADDED : செப் 13, 2011 12:13 AM


Google News

அஞ்சுகிராமம் : அஞ்சுகிராமம் அருகே தனியார் கல்லூரி இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஞ்சுகிராமம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் அமைந்துள்ள ஏ.டி.எம்., மிஷினை உடைத்து கொள்ளை அடிக்க கடந்த மே 4ம் தேதி முயற்சி நடந்தது. ஏ.டி.எம்.,மிஷினில் கொள்ளை அடிக்கும் முயற்சிக்க முன் கல்லூரி காவலாளிகளான வழுக்கம்பாறையை சேர்ந்த பால்பாண்டியன், களக்காடு நடுவூர்சாலையை சேர்ந்த சுடலைமுத்து இருவரையும் கருங்கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்தனர். குமரி மாவட்டத்தையே நடுக்கிய இந்த சம்பவத்தில் சுமார் 3 மாதங்களாக எந்த துப்பும் துலங்கவில்லை. இந்நிலையில் ஆலங்குளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு உரிய முறையில் 3 பேரை பிடித்து விசாரித்ததில் தனியார் கல்லூரி ஏ.டி.எம்.,ல் கொள்ளை அடிக்க முயற்சித்து காவலாளிகளை கொன்றதாக ஒப்புக் கொண்டனர். மொத்தம் ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலச்சேவலை சேர்ந்த முருகன், பாண்டியராஜன் என்ற முருகன் குட்டி, மகாராஜன் உட்பட மூவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேல் விசாரணைக்காக அஞ்சுகிராமம் போலீசார் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கோயம்புத்தூர் சவரிவிளை பாண்டியராஜன் கூறும் போது; நாங்கள் ஆறு பேர் சேர்ந்து கும்பலாக கொள்ளையடித்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால் எங்கள் கனவு நனவாகவில்லை. எனவே நாங்கள் தனித்தனியாக பிரிந்து விட்டோம் என்றார். மேலும் திருச்சியை சேர்ந்த ஸ்டீபன் தேவ், கோவை கருப்பசாமி ஆகிய இருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உண்டு என்று கூறினார். இதையடுத்து போலீசார் இவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us