/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர பஸ்கள் நிறுத்தம்தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர பஸ்கள் நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர பஸ்கள் நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர பஸ்கள் நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர பஸ்கள் நிறுத்தம்
தூத்துக்குடி : ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட போலீசார் உத்தரவிட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் கிராமபுறங்களுக்கு செல்லும் பஸ்கள் எல்லாம் இரவில் ரத்து செய்யப்பட்டது. மொபசல் பஸ்கள் எல்லாம் இரவில் டிப்போவிற்கு திருப்பி விடப்பட்டது. பஸ்கள் ரத்து செய்யப்பட்டதால் கிராமப்புற மக்கள் தங்களுக்கு ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ஜான்பாண்டியனுடன் சிறைபிடிக்கப்பட்ட 17 பேரை போலீசார் நேற்று மதியம் விடுவித்தனர். ஜான்பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், துரைபாண்டியன், கண்ணன் மற்றும் காளி ஆகிய 5 பேர் மீது 151 சிஆர்பிசி., பிரிவின் கீழ் முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது வைத்துள்ளனர். ஜான்பாண்டியனின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.நேற்று இரவு 8 மணிக்கு மேல் தூத்துக்குடியில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் ரூட்டில் உள்ள அனைத்து டவுன்பஸ்களும் நிறுத்தப்பட்டன. ஏழு மணிக்கு மேல் ஓட்டப்பிடாரம் பகுதியில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் டெப்போவிற்கு அனுப்பப்பட்டன. இதே போல் மணியாச்சி பகுதிக்கு 8 மணிக்கு மேல் எந்த அரசு பஸ்சும் இயக்கப்படவில்லை.தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கும் இரவு 9 மணிக்கு மேல் பஸ்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டு விடும். இன்று காலையில் அனைத்து பஸ்களும் டெப்போக்களில் இருந்து 6 மணிக்கு மேல் தான் இயக்கப்படும் என்று நெல்லை அரசு போக்குவரத்துகழக பொதுமேலாளர் முருகன் தெரிவித்தார்.பஸ் நிறுத்தப்படும் விபரம் தெரியாமல் பயணிகள் பலர் வெளியூர் செல்ல முடியாமல் இரவில் தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டில் தவித்து கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.
குளத்தூரில் 5 மணிநேரம் பஸ் மறியல் : பரமக்குடியில் நடந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டி ல் 7 பேர் இறந்த சம்பவத்தில் நீதி விசா ரணை நடத்த கோரி குளத்தூர் அருகே மேல்மாந்தை கிராமமக்கள் சுமார்2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறி யல் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து கேள் விப்பட்ட கோவில்பட்டி ஏடிஎஸ்பி, டிஎ ஸ்பிஉள்ளிட்ட போலீஸ் அதி காரி கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டம் நடத்திய மக் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவி த்தையடுத்து போராட்டம் கை விடப்பட்டது. இந்த மறியல் போ ராட்டத்தினால் குளத்தூர் ராமே ஸ்வரம் ரோட்டில் சுமார் 5 மணிநேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் அரசு பஸ் மீது கல்வீச்சு : கோவில்பட்டியில் இருந்து ராஜாபட்டிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பஸ் பசுவந்தனை ரோட்டில் தனியார் பயர் ஒர்க்ஸ் அருகில் செல்லும் போது எதிரே பைக்கில் வந்த மர்மநபர்கள் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது. உடனடியாக பஸ் டிரைவர் ,கண்டெக்டர் கொப்ப ம்பட்டி போலீசில் கொடுத்த புகா ரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்களை வீசி தாக்கி மர் மநபர்களை தேடிவருகின்றனர்.


