/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மனைவி கழுத்தை நெறித்துகொலை : கள்ளக்காதலனுடன் வாழ்ந்ததால் கணவன் ஆத்திரம்மனைவி கழுத்தை நெறித்துகொலை : கள்ளக்காதலனுடன் வாழ்ந்ததால் கணவன் ஆத்திரம்
மனைவி கழுத்தை நெறித்துகொலை : கள்ளக்காதலனுடன் வாழ்ந்ததால் கணவன் ஆத்திரம்
மனைவி கழுத்தை நெறித்துகொலை : கள்ளக்காதலனுடன் வாழ்ந்ததால் கணவன் ஆத்திரம்
மனைவி கழுத்தை நெறித்துகொலை : கள்ளக்காதலனுடன் வாழ்ந்ததால் கணவன் ஆத்திரம்
ADDED : செப் 13, 2011 12:14 AM
விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த மனைவியை கழுத்தை நெறித்து கணவன் கொலை செய்தார்.
இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:விளாத்திகுளம் அருகே சூரங்குடியை அடுத்துள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(38). இவருக்கும் வேடப்பட்டியைச் சேர்ந்த சன்னாசி மகன் இளங்காமணி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இளங்காமணி வேலைக்காக வெளிநாட்டில் இருந்த சமயத்தில் கிருஷ்ணவேணிக்கும் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த இளங்காமணி மனைவியின் நடத்தை பற்றி கேள்விப்பட்டு பிரிந்து வாழ்ந்துவந்தார். இதையடுத்து கிருஷ்ணவேணி தன்னுடைய கள்ளக்காதலன் சசிகுமாருடன் தங்கம்மாள்புரத்தில் வசித்துவந்தார். இதனால் ஆத்திரமடைந்த இளங்காமணி நேற்று காலை தங்கம்மாள்புரத்திற்கு வந்து தன் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர். மேலும் தப்பிஓடிய இளங்காமணியை தேடிவருகின்றனர்.


