Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பம்பிங் ஸ்டேஷன் பள்ளத்தில் மூழ்கி சிறுமி பலி

பம்பிங் ஸ்டேஷன் பள்ளத்தில் மூழ்கி சிறுமி பலி

பம்பிங் ஸ்டேஷன் பள்ளத்தில் மூழ்கி சிறுமி பலி

பம்பிங் ஸ்டேஷன் பள்ளத்தில் மூழ்கி சிறுமி பலி

ADDED : செப் 14, 2011 03:20 AM


Google News
தாம்பரம்:தாம்பரம், கிருஷ்ணா நகரில் பாதாள சாக்கடை திட்ட பம்பிங் ஸ்டேஷனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், தவறி விழு ந்து தண்ணீரில் மூழ்கி சிறுமி பலியானாள். அதிகாரிகளின் அலட்சியத்தால், இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், கிருஷ்ணா நகர், சுபாஷ் நகரில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க, கடந்த ஆண்டு 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. பள்ளத்தை சுற்றி, பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுற்றுச்சுவர் எதுவும் அமைக்கப்படவில்லை. சமீபத்தில் பெய்த மழையால், பள் ளம் முழுவதும் தண்ணீர் தேங்கியது.இதனால், அருகே குடியிருப்புகள் உள்ளதால், பள்ளத்தை சுற்றி வேலி அமை க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பினர். ஆனால், மெட் ரோ வாட்டர் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில், சுபாஷ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். கூலித் தொழிலாளி.

இவரது மனைவி சுகுணா. இவர்களுடைய குழந்தைகள் ஸ்ரீதர், 9, காயத்ரி, 8.நேற்று காலை, இந்த பள்ளத்தின் ஓரம் இருந்த ஒரு கல் மீது, காயத்ரி அமர்ந்து பல் தேய்த்து கொண்டிருந்தாள். அப்போது, கல் சரிந்து, காயத்ரி பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். இதற்கிடையில், நீண்ட நேரம் ஆகியும் காயத்ரி காணாததால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால், காயத்ரி கிடைக்கவில்லை. அப்போது, பள்ளத்தில் கல் சரிந்ததற்கான அடையாளம் தெரிந்தது. இதில் சந்தேகமடைந்த அப்பகுதியினர் பள்ளத்தில் குதி த்து தேடியபோது, காயத்ரி பிணமாக மீட்கப்பட்டார். தொடர் பலி கடந்த மாதம், சேலையூரில் பம்பிங் ஸ்டேஷனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி, ஐந்தாம் வகுப்பு மாணவன் இறந்தான். தற்போது, சிறுமி காயத்ரி தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளாள். மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us