Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சிக்கு களப்பயணம்வந்த பாலக்காடு விவசாயிகள்

பொள்ளாச்சிக்கு களப்பயணம்வந்த பாலக்காடு விவசாயிகள்

பொள்ளாச்சிக்கு களப்பயணம்வந்த பாலக்காடு விவசாயிகள்

பொள்ளாச்சிக்கு களப்பயணம்வந்த பாலக்காடு விவசாயிகள்

ADDED : செப் 15, 2011 11:41 PM


Google News
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பட்டுப்புழு வளர்க்கும் பகுதிக்கு கேரள பட்டு வளர்ச்சித்துறையினர் களப்பயணம் மேற்கொண்டனர்.கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து சுமார் 60 விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து தெரிந்து கொள்ள களப்பயணம் மேற்கொண்டிருந்தனர். பாலக்காடு மத்திய பட்டு வாரிய விஞ்ஞானிகள் சரளா மற்றும் சியாமளா ஆகியோர் வந்திருந்தனர்.பொள்ளாச்சி பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி பகுதியை அடுத்த ஆண்டியூர், தேவனூர்புதூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் பட்டுப்புழு வளர்ப்பு நடந்து வருகிறது. பாலக்காடு பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள வந்திருந்தனர்.

பட்டுப்புழு வளர்ப்பில் முட்டை பருவத்தில் இருந்து கடைசி பருவம் வரை அனைத்து பருவங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. பட்டுப்புழுக்களுக்கு வழங்கப்படும் உணவான மல்பெரி செடிகள் நடவு முறைகள், அவை பட்டுப்புழுக்களுக்கு உணவாக வழங்கும் முறைகள் ஆகியவை விளக்கப்பட்டன.தொடர்ந்து, மல்பெரி செடிகளை வளர்க்கும் போது பயன்படுத்தப்படும் செயற்கை உரங்கள், இயற்கை உரங்கள், மரம் நடுதல், தட்ப வெப்ப நிலை ஆகியவை குறித்து இக்களபயணத்தில் விளக்கப்பட்டது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us