ADDED : செப் 15, 2011 11:41 PM
ஆனைமலை:திவான்சாபுதூர் கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
சட்ட விழிப்புணர்வு மன்றம் துவக்கம் மற்றும் சட்டவிழிப்புணர்வு முகாம்
நடந்தது.
முகாமை பொள்ளாச்சி சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு
தலைவருமான குருமூர்த்தி துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஆனந்தகணேசன்
வரவேற்றார்.விழாவில் வக்கீல்கள் கந்தகுமார், சுப்பிரமணியம், செந்தில்,
ஆனைமலை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் ஆகியோர் கலந்துகொண்டனர். சட்டப்பணிகள்
குழு முதுநிலை ஆய்வாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.


