/உள்ளூர் செய்திகள்/கடலூர்/"அக்மார்க்' பொருட்களை பயன்படுத்தவேளாண் அலுவலர் வேண்டுகோள்"அக்மார்க்' பொருட்களை பயன்படுத்தவேளாண் அலுவலர் வேண்டுகோள்
"அக்மார்க்' பொருட்களை பயன்படுத்தவேளாண் அலுவலர் வேண்டுகோள்
"அக்மார்க்' பொருட்களை பயன்படுத்தவேளாண் அலுவலர் வேண்டுகோள்
"அக்மார்க்' பொருட்களை பயன்படுத்தவேளாண் அலுவலர் வேண்டுகோள்
ADDED : செப் 16, 2011 12:16 AM
பண்ருட்டி:கலப்படம் இல்லாத 'அக்மார்க்' உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்திட
வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பண்ருட்டி வேளாண்மை அலுவலர்
(ரசாயனம்) பிரேமலதா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:நாம் அன்றாடம்
பயன்படுத்தும் உணவு பொருட்களில் ஏதேனும் ஒன்றில் கலப்படம் இருந்தாலும் கூட
நமது உடல் நலம் பாதிக்கப்படலாம்.
கலப்படம் திட்டமிட்டு செய்யப்படலாம்.
அல்லது தரமற்ற மூலபொருட்கள், தவறான முறையில் பதப்படுத்துதல்,
அனுமதிக்கப்படாத சாயங்கள், நச்சுத்தன்மை கொண்ட பேக்கிங் பொருட்கள்
போன்றவற்றால் கலப்படமாகலாம்.உணவு பொருட்களின் கலப்படத்தினை அறிந்து அதனை
தவிர்த்து, தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்திட அனைவராலும் இயலாது.எனவே
நுகர்வோர் நலன் கருதி மத்திய, மாநில அரசுகளால் உணவு பண்டங்களை பரிசோதனை
செய்து தரச்சான்று வழங்கும் 'அக்மார்க்' பொருட்களை வாங்கி பயன்பெற கேட்டுக்
கொள்கிறேன்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


