Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி:ஏற்காடு வனத்தில் நக்சல் நடமாட்டம்?

துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி:ஏற்காடு வனத்தில் நக்சல் நடமாட்டம்?

துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி:ஏற்காடு வனத்தில் நக்சல் நடமாட்டம்?

துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி:ஏற்காடு வனத்தில் நக்சல் நடமாட்டம்?

ADDED : செப் 16, 2011 12:17 AM


Google News

கோவை:ஏற்காடு வனத்தில், நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த வாலிபர், கோவையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் உள்ள காசிக்கல் மலை கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் செல்வராஜ்,18.

காட்டுக்குள் விறகு பொறுக்கி விற்று வந்த இவர், கடந்த 5ம் தேதி காலை, அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றார். அங்குள்ள மரத்தடியில், நாட்டுத் துப்பாக்கி ஒன்று கிடந்தது. அருகில் யாராவது பதுங்கியுள்ளனரா என பார்த்த அவர், ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து, துப்பாக்கியை எடுத்து பரிசோதித்தார்.



இதில், எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து, நான்கு குண்டுகள், வாலிபரின் அடிவயிற்றில் பாய்ந்து மயங்கினார்.விறகு சேகரிக்கச் சென்ற மகனைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வனப்பகுதிக்குள் தேடியதில், மயங்கிக் கிடப்பதைக் கண்டனர். ஏற்காடு மலைப்பகுதியில், முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 7ம் தேதி சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த வாலிபர், நேற்று காலை இறந்தார். ஏற்காடு வனப்பகுதியில் துப்பாக்கி வந்தது எப்படி? அப்பகுதியில் நக்சல் நடமாட்டம் உள்ளதா என, ஏற்காடு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us