Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

ADDED : செப் 16, 2011 12:26 AM


Google News

கரூர்: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா துரை பிறந்த தின நாளை முன்னிட்டு நடந்த சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி கரூரில் சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியில் 13 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் தாந்தோணி மலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சங்கர் முதலிடமும், பசுபதிபாளையம் செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளி மாணவன் சதீஷ்குமார் இரண்டாமிடமும், பசுபதிபாளையம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜஸ்வந்த் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவர்களுக்கான 15 வயதுக்குட்பட்ட பிரிவில் தாந்தோணி மலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் செல்லதுரை முதலிடமும், மணிவேல் இரண்டாமிடமும், கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவன் மோகன் மூன்றாமிடமும் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் கட்டாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சரவணன் முதலிடமும், தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கார்த்திக் இரண்டாமிடமும், ரங்கநாதன் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சுபாஷ் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவிகளுக்கான 13 வயதுக்குட்பட்ட பிரிவில் கரூர் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளி மாணவி புஷ்பராணி முதலிடமும், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சகுந்தலா இரண்டாமிடமும், மணிமேகலை மூன்றாமிடமும் பெற்றனர். 15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யா முதலிடமும், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபர்னா இரண்டாமிடமும், குளித்தலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் வாசு உள்பட பலர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us