/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"போலி விஸா' கொடுத்து ஏமாற்றிய மூவர் மீது வழக்கு"போலி விஸா' கொடுத்து ஏமாற்றிய மூவர் மீது வழக்கு
"போலி விஸா' கொடுத்து ஏமாற்றிய மூவர் மீது வழக்கு
"போலி விஸா' கொடுத்து ஏமாற்றிய மூவர் மீது வழக்கு
"போலி விஸா' கொடுத்து ஏமாற்றிய மூவர் மீது வழக்கு
ADDED : செப் 16, 2011 12:26 AM
திருச்சி: திருச்சியில் போலி விஸா கொடுத்து ஏமாற்றிய மூவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி தென்னூர் சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல்சலாம் (23). இவர் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ராஜா முகம்மது (36) என்பவரை அணுகியுள்ளார். அவரும், ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வெளிநாடு வேலைக்கு செல்ல விஸா வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி அப்துல்சலாம் பணம் கொடுத்துள்ளார். பலமாதங்கள் ஆகியும் விஸா வரவில்லை. இதையடுத்து அப்துல்சலாம் பணம் கேட்டு ராஜா முகம்மதுவை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஸா கிடைத்து விட்டதாக கூறி, ராஜா முகம்மது விஸா ஒன்றை கொடுத்துள்ளார். அதை பெற்றுக் கொண்டு திருச்சி விமானம் நிலையம் வழியாக வெளிநாடு செல்ல முயன்றபோது, அது போலி விஸா என்று தெரியவந்தது. இதுகுறித்து தில்லைநகர் போலீஸில் அப்துல்சலாம் புகார் செய்தார். புகாரின் பேரில், கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ராஜா முகம்மது, அவரது மனைவி சக்சனா, பெருமாள் (45) ஆகிய மூவர் மீதும் தில்லைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


