/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பைக் திருடன் குண்டர் சட்டத்தில் கைதுபைக் திருடன் குண்டர் சட்டத்தில் கைது
பைக் திருடன் குண்டர் சட்டத்தில் கைது
பைக் திருடன் குண்டர் சட்டத்தில் கைது
பைக் திருடன் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : செப் 16, 2011 12:26 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி டவுன் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டுகள் அதிகரித்து வந்தது. பைக் திருட்டை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், பைக் திருட்டு தொடர்ந்தது. கடந்த வாரம் தர்மபுரி டவுன் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டு வழக்கில் முக்கல்நாயக்கன்பட்டி, தலைவிரிச்சான்கொட்டாயை சேர்ந்த வடிவேல் மகன் சக்திவேல் (32) என்பரை போலீஸார் கைது செய்தனர். அதியமான்கோட்டை, தர்மபுரி, மதிகோன்பாளையம், காரிமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் சக்திவேல் மீது பைக் திருட்டு தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்ட சக்திவேலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., கணேசமூர்த்தி கலெக்டர் லில்லிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பரிந்துரையை ஏற்றதை தொடர்ந்து சக்திவேல் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


