ADDED : செப் 16, 2011 12:28 AM
தர்மபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி தொடர் போட்டிகள் 18ம் தேதி நடக்கிறது.
மாவட்ட அளவிலான ஹாக்கி தொடர் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 18ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் அணிகள் தங்கள் அணிகளை நாளை (17ம் தேதி) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி மண்டல அளவிலான போட்டிக்கும், மண்டல அளவில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கும் அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன் தெரிவித்தார்.


