/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பல்வேறு திருட்டுகளில் தொடர்புடையவாலிபர் கைது: பொருட்கள் பறிமுதல்பல்வேறு திருட்டுகளில் தொடர்புடையவாலிபர் கைது: பொருட்கள் பறிமுதல்
பல்வேறு திருட்டுகளில் தொடர்புடையவாலிபர் கைது: பொருட்கள் பறிமுதல்
பல்வேறு திருட்டுகளில் தொடர்புடையவாலிபர் கைது: பொருட்கள் பறிமுதல்
பல்வேறு திருட்டுகளில் தொடர்புடையவாலிபர் கைது: பொருட்கள் பறிமுதல்
ADDED : செப் 16, 2011 12:44 AM
விழுப்புரம்:பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது
செய்தனர்.விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., சேகர் உத்தரவின் பேரில்
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும்
போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
பனையபுரம் சோதனை சாவடி அருகே
பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விக்கிரவாண்டி அடுத்த
வாக்கூர் கிராமத்தை சேர்ந்த சிவபாலன் என்பவரை பிடித்து போலீசார்
விசாரித்தனர்.இவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள், நகைகள், அரசு
கேபிள் டிவி ஒயர்கள், பள்ளிக் கூடங்களில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை
திருடியது தெரிய வந்தது. இவர் கொடுத்த தகவலின்பேரில் இரண்டு மோட்டார்
சைக்கிள்கள், 3 சவரன் தங் கநகைகள், கேபிள் ஒயர்களை பறிமுதல்
செய்தனர்.சிவபாலனை போலீசார் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்
கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.


