/உள்ளூர் செய்திகள்/மதுரை/பருவநிலை மாற்றத்திற்கு நீர்பாதுகாப்பு அவசியம்பருவநிலை மாற்றத்திற்கு நீர்பாதுகாப்பு அவசியம்
பருவநிலை மாற்றத்திற்கு நீர்பாதுகாப்பு அவசியம்
பருவநிலை மாற்றத்திற்கு நீர்பாதுகாப்பு அவசியம்
பருவநிலை மாற்றத்திற்கு நீர்பாதுகாப்பு அவசியம்
ADDED : செப் 16, 2011 01:16 AM
மதுரை : ''பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நீர்பாதுகாப்பு அவசியம்,'' என, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த தானம் அறக்கட்டளை கருத்தரங்கில், நீரியல் நிபுணர் சிவனப்பன் தெரிவித்தார்.'குண்டாறு ஆற்றுப்படுகையில் சங்கிலித் தொடர் வேளாண்மை' குறித்து அவர் கூறியதாவது:பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நீர்பாதுகாப்பு அவசியம்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டில் நீர்நிலைகளுக்கும், அதை பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் பங்குண்டு. மழைநீர் சேகரிப்பு முறை சிறந்தது. ஆனால், அதை பொதுமக்கள் செயல்படுத்துவதை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எஞ்சியுள்ள நீர்நிலைகளை காப்பாற்றும் செயல்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகளை காப்பாற்ற, தற்போதுள்ள சட்டமே போதும். அதை கடுமையாக நடைமுறை படுத்தவேண்டும். விவசாயத்திற்கு பண்ணைகுட்டை அவசியம் என்பதை விவசாயிகள் உணரவேண்டும். பருவநிலை, சுற்றுச்சூழல் மேம்பாட்டில் தொழில்நிறுவனங்கள் அக்கறை கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு பெருக்கத்தோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். அதுவே தேசத்தின் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும், என்றார். வயலக அறக்கட்டளை முதன்மை நிர்வாகி குரு நாதன், வேளாண் இணை இயக்குனர் சங்கரலிங்கம், அருப்புக்கோட்டை வேளாண் மண்டல பேராசிரியர் செல்லையா, அணித்தலைவர் ராஜசேகர் பங்கேற்றனர்.


