ADDED : செப் 16, 2011 01:27 AM
திருப்பூர்:மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து
முருகம்பாளையத்தில் இ.கம்யூ.,வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.சமுதாய
நலக்கூடம் மற்றும் பாளையக்காடு பகுதியில் ரேஷன் கடை கட்ட, எம்.பி., தொகுதி
மேம்பாட்டு நிதி ஒதுக்கியும், பணிகள் மேற்கொள்ளாதது; மாவட்ட கவுன்சிலர்
நிதியில் பெரியார் நகர் பகுதிக்கு கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கியும்,
பணிகள் துவக்காததை கண்டித்தும், வஞ்சிபாளையம், குளத்துப்பாளையம்,
பாளையக்காடு, ஜவகர் நகர் பகுதிக்கு கழிப்பிடம் கட்ட வேண்டும்.
வி.ஏ.ஓ.,
நியமிக்க வேண்டும்; ரேஷன் கடை முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற
கோரிக்கைகளை வலியுறுத்தி இ.கம்யூ., சார்பில் முருகம்பாளையம் பள்ளி அருகே
உண்ணாவிரத போராட்டம் நடந்தது.பத்மனாபன் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக
வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வடிவேல், மாதர் சங்க மாவட்ட தலைவர்
அங்குலட்சுமி, ஒன்றிய செயலாளர் உண்ணிகிருஷ்ணன் உட்பட பலர்பங்கேற்றனர்.


