Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/3 நகராட்சிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்

3 நகராட்சிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்

3 நகராட்சிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்

3 நகராட்சிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்

ADDED : செப் 16, 2011 01:28 AM


Google News

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில்; மூன்றில், பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

பவானி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.

12 ஆயிரத்து 629 ஆண், 13 ஆயிரத்து 58 பெண் என 25 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். இதில், பொது வார்டாக 17, பெண்கள் (பொது) 8, ஆதிதிராவிடர் (பெண்) 1, ஆதிதிராவிடர் (பொது) 1 என 27 வார்டுகள் உள்ளன. கோபி நகராட்சியில் 19 ஆயிரத்து 124 ஆண், 19 ஆயிரத்து 586 பெண் என 38 ஆயிரத்து 710 வாக்காளர்கள் உள்ளனர். பொது வார்டாக 18, பெண் (பொது) 9, தாழ்த்தப்பட்ட (பெண்) 1, தாழ்த்தப்பட்ட (பொது) 2 என 30 வார்டுகள் உள்ளன.



சத்தியமங்கலம் நகராட்சியில் 12 ஆயிரத்து 294 ஆண், 12 ஆயிரத்து 187 பெண் என 24 ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர். பொது வார்டாக 17, பெண் (பொது) 8, ஆதிதிராவிடர் (பெண்) 1, ஆதிதிராவிடர் (பொது) 1 என 27 வார்டுகள் உள்ளன.

புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 5,892 ஆண், 6,120 பெண் என 12 ஆயிரத்து 12 வாக்காளர்கள் உள்ளனர். பொது வார்டாக 10, பெண் (பொது) 5, ஆதிதிராவிடர் (பெண்) 1, ஆதிதிராவிடர் (பொது) 2 என 18 வார்டுகள் உள்ளன.

இந்நான்கு நகராட்சியிலும் பொது வார்டாக 62, பெண் (பொது) 29, ஆதிதிராவிடர் (பெண்) 3, தாழ்த்தப்பட்ட (பெண்) 1, ஆதிதிராவிடர் (பொது) 4, தாழ்த்தப்பட்ட (பொது) 2 என 101 வார்டுகள் உள்ளன.

பவானி, கோபி, புன்செய்புளியம்பட்டி ஆகிய மூன்று நகராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். சத்தியமங்கலத்தில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்னர்.

இந்த நான்கு நகராட்சிப்பகுதியிலும் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளன. விலாசம், பெயர் மாற்றம், நீக்கம் போன்றவைகளுக்கு 30க்கும் குறைவான மனுக்களே வந்துள்ளன. இவை அனைத்தும் முறையான விசாரணைக்குப் பின், வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us