/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓட்டுச்சாவடி அலுவலருக்கு 19ல் பயிற்சிஓட்டுச்சாவடி அலுவலருக்கு 19ல் பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலருக்கு 19ல் பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலருக்கு 19ல் பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலருக்கு 19ல் பயிற்சி
ADDED : செப் 16, 2011 01:29 AM
திருப்பூர்:உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு
முதல்கட்ட பயிற்சி வரும் 19ல் நடக்கிறது.உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம்
நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து பகுதிகளிலும் நடந்து
வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள், 17
பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 265 ஊராட்சிகள் மற்றும் 17 மாவட்ட
ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.நகரப்பகுதியில் 864 மற்றும்
ஊரகப் பகுதிகளில் 1,572 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல்
மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு,
ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.மண்டல தேர்தல்
அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான
பணிகள் ஒதுக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கும் பணி
துவக்கப்பட்டுள்ளது.
நகரப்பகுதி ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற தலா 4 அலுவலர்
மற்றும் ஒரு தலைமை அலுவலர் என 5 பேர் நியமிக்க வேண்டும். ஊரகப் பகுதியில்
ஒரு அலுவலர் கூடுதலாக நியமிக்க வேண்டும். அவ்வகையில் 15,000 பேரும்,
ரிசர்வ் அடிப்படையில் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் என 1,500 பேரும்
ஓட்டுப்பதிவு பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்.மண்டலம் வாரியாக ஆசிரியர்கள்
மற்றும் அரசு ஊழியர்கள் குறித்த விவரங்கள், அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும்
அலுவலர் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடியில் பணியாற்ற தேவையான அளவு எண்ணிக்கையிலான அலுவலர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அவர்கள் பணியாற்றும் பகுதி உள்ளாட்சி
அமைப்பு மூலம் வரும் 19ம் தேதி அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும்
விதம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


