/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட் இருளில் பயணிகள் தவிப்புபளபளக்கும் பஸ் ஸ்டாண்ட் இருளில் பயணிகள் தவிப்பு
பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட் இருளில் பயணிகள் தவிப்பு
பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட் இருளில் பயணிகள் தவிப்பு
பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட் இருளில் பயணிகள் தவிப்பு
ADDED : செப் 16, 2011 01:30 AM
திருப்பூர்:திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் போதிய மின் விளக்குகள்
அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் பயணிகள் கடும் சிரமத்துக்கு
உள்ளாகின்றனர்.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் மூன்று கோடி ரூபாய் செலவில்
கான்கிரீட் தரை தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, தெற்கு
பகுதியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்சமயம் வடக்கு பகுதியில் பணிகள்
நடந்து வருகின்றன.பஸ் ஸ்டாண்டின் தெற்கு பகுதி உட்பட நுழைவாயில் பகுதியில்
மின் விளக்குகள் இல்லை.
இதனால், நுழைவாயில் தெரியாமல் பஸ் டிரைவர்களும்,
பொதுமக்களும் குழப்பம் அடைகின்றனர். தெற்கு பகுதி நுழைவாயில்
குறுகியதாகவும், சரிவாகவும் உள்ளதால் நடந்து செல்லும் பொதுமக்கள்,
இருட்டில் தடுக்கி விழும் நிலையும் ஏற்படுகிறது.பஸ்கள் நிறுத்தும் இடங்கள்,
பயணிகள் காத்திருக்கும் பகுதிகள், டவுன் பஸ்கள் நிறுத்தப்படும் மேற்கு
பகுதி என எந்த பகுதியிலும் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. பஸ்கள்
நிற்கும் இடங்கள், பயணிகள் காத்திருக்கும் இடங்களில் குழப்பம் ஏற்படுவதோடு,
பஸ் ஸ்டாண்ட் முழுவதும் இருட்டாக உள்ளதால் காத்திருக்கும் பயணிகள் மீது
பஸ்கள் மோதும் அபாயம் உள்ளது. ஒருவித அச்சத்துடன் பயணிகள் இரவு நேரத்தில்
காத்திருக்க வேண்டியுள்ளது.பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி நடக்கும்போதே,
ஆய்வு செய்த கலெக்டர் மதிவாணன், இப்பகுதியில் கூடுதல் மின் விளக்குகள்
அமைக்க அறிவுறுத்தினார். ஆனால், பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு திறந்து
விட்ட மாநகராட்சி நிர்வாகம், மின் விளக்குகள் அமைப்பது குறித்து
கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது.


