/உள்ளூர் செய்திகள்/சேலம்/தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் 45 பேருக்கு பதவி உயர்வு; 32 பேருக்கு மாறுதல்தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் 45 பேருக்கு பதவி உயர்வு; 32 பேருக்கு மாறுதல்
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் 45 பேருக்கு பதவி உயர்வு; 32 பேருக்கு மாறுதல்
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் 45 பேருக்கு பதவி உயர்வு; 32 பேருக்கு மாறுதல்
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் 45 பேருக்கு பதவி உயர்வு; 32 பேருக்கு மாறுதல்
ADDED : செப் 17, 2011 03:18 AM
சேலம்: அரசு தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான
இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, சேலம் சிறுமலர்
தொடக்கப்பள்ளியில், நேற்று தொடங்கியது.நேற்று காலை, நடுநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கும், நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால், பணியிடம்
இல்லாத தலைமை ஆசிரியர்களுக்கும் மாறுதல் மற்றும் பதவி உயர்வும்
வழங்கப்பட்டது.மேலும், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட
நடுநிலைப்பள்ளிகளில், 6, 7, 8 வகுப்புகளுக்கு பாடம் எடுத்து,
உயர்நிலைப்பள்ளிகளுக்கு எடுத்துக்கொள்ளாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு,
இடமாறுதல் கவுன்சலிங், பட்டதாரி தமிழ் ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி
உயர்வுக்கான கவுன்சலிங் ஆகியவை நடந்தது.இதில், 15 பேருக்கு நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்களாகவும், 31 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு
வழங்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 14 பேர், பட்டதாரி
ஆசிரியர்கள், 18 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட
தொடக்கக்கல்வி அலுவலர்(பொறுப்பு) ஜெயராமன் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு
இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார். முன்னதாக, நேற்று
காலை சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜராஜன் கவுன்சலிங் நடப்பதை
பார்வையிட்டார்.நான்கு நாட்கள் நடக்கும் கவுன்சலிங்கில், இன்று தரம்
உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும், துவக்கப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்த பள்ளிகளில், 6, 7, 8ம் வகுப்புகளுக்கு
பாடம் எடுத்து, உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளப்படாத இடைநிலை
ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது.நாளை காலை, இடைநிலை
ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதலும், மதியம் இடைநிலை ஆசிரியர் மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலும் வழங்கப்பட
உள்ளது. செப் 20ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு
மாவட்டம் மாறுதலும், மதியம், பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு
மாவட்டம் மாறுதலும் வழங்கப்பட உள்ளது.