Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆயிரம் ஆண்டுகால தடுப்பணை வரதமாநதி அருகே கண்டுபிடிப்பு

ஆயிரம் ஆண்டுகால தடுப்பணை வரதமாநதி அருகே கண்டுபிடிப்பு

ஆயிரம் ஆண்டுகால தடுப்பணை வரதமாநதி அருகே கண்டுபிடிப்பு

ஆயிரம் ஆண்டுகால தடுப்பணை வரதமாநதி அருகே கண்டுபிடிப்பு

ADDED : செப் 24, 2011 09:47 PM


Google News

பழநி : ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாண்டியர் கால தடுப்பணை, பழநி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழநி வரதமாநதி கரைப்பகுதியில் உள்ள தடுப்பணை, 1000 ஆண்டுகள் பழமையானது என, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியது: வரதமாநதியில் இருந்து ஒரு கி.மீ., ல், பிரியும் இடத்தில், சிதிலமடைந்த நிலையில் தடுப்பணை உள்ளது. வரதமாநதியின் கிளை, இங்கு வடக்கு நோக்கி பிரிகிறது. மிக நீண்ட, இந்த அணையின் 100 மீட்டர் தூரம் மட்டுமே தற்போது உள்ளது. இதர பகுதிகள், இயற்கை சீற்றங்களால் சிதிலமடைந்துள்ளன. தலா 1.8 மீட்டர் உயரமும், அகலமும் கொண்ட தடுப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இவை 1.4 மீட்டர் நீளமும், அரைமீட்டர் உயரமும் உள்ள ராட்சத கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேற்குபுற கிளை வாய்க்கால் மூலம் வெளிப்படும் தண்ணீர், விவசாய நிலங்களுக்கு பாய்ந்துள்ளது. நதியின் குறுக்கே கட்டப்படாமல், கரையோரமாக தடுப்பணை போல கட்டப்பட்டது, ஒரு சிறப்பம்சம். கரிகாலச் சோழன் கட்டிய, கல்லணைக்கு இணையான சிறப்புடையது. கி.பி., 14 ம் நூற்றாண்டின் திரிகோணச்சக்கரவர்த்தி அவனிவேந்தராமன் என்ற சிறப்பு பெயர் கொண்ட பாண்டிய மன்னன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இதை தெரிவிக்கிறது. அய்யம்புள்ளி குளம், கொண்டையாற்று அணை, வைகாறு பெருமலை என, நலாபுறம் சூழப்பட்டுள்ளது. மன்னனின் பெயரால் அவனிவேந்தராமநல்லூர் என, பெயரிடப்பட்டது. பழநி முருகனுக்கு தேவதானமாக அளிக்கப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு வெட்டப்படும் முன்னே, தடுப்பணை இருந்தது உறுதியாகியுள்ளது. ஆடலூர், பன்றிமலை பகுதியிலும் கொண்டையாறு இருப்பினும், இரண்டும் வெவ்வேறு ஆறுகள். இத்தடுப்பணை, பாண்டியர் கால வேளாண்மை, நீர்பாசன திறமைக்கு சிறப்பான எடுத்துக்காட்டு, என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us