/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுவர் விளம்பரம் முன்னே "சீட்' கிடைக்கும் பின்னேசுவர் விளம்பரம் முன்னே "சீட்' கிடைக்கும் பின்னே
சுவர் விளம்பரம் முன்னே "சீட்' கிடைக்கும் பின்னே
சுவர் விளம்பரம் முன்னே "சீட்' கிடைக்கும் பின்னே
சுவர் விளம்பரம் முன்னே "சீட்' கிடைக்கும் பின்னே
ADDED : செப் 24, 2011 09:47 PM
வடமதுரை : வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு முன்னரே, வேல்வார்கோட்டை பகுதியில் தி.மு.க., சார்பில், பெயருடன் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
வடமதுரை ஒன்றியம் வேல்வார்கோட்டை ஊராட்சி பகுதிக்கான ஒன்றிய கவுன்சிலர் கர்ணன். தற்போது ஊராட்சி ஒன்றிய துணை தலைவராகவும் உள்ளார். வடமதுரை ஒன்றியத்தை பொறுத்தவரை நேற்று மதியம் வரை, எந்த பதவிக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில் வேல்வார்கோட்டை பகுதியில் மட்டும் இரு நாட்களுக்கு முன்னரே, கவுன்சிலர் கர்ணன் பெயரும், தி.மு.க., சின்னமும் வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்ணன் கூறுகையில், ''ஆதரவாளர்களின் ஆர்வ கேளாறால் பெயர் எழுதப்பட்டுள்ளது. பெயரை அழிக்கும்படி தெரிவித்துள்ளேன்,'' என்றார்.


