ADDED : செப் 24, 2011 09:58 PM
திருவாடானை : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் அ.தி.மு.க., கிளை செயலாளர் யூசுப் சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யபட்டார்.
எஸ்.பி.பட்டினம் போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த காங்., உறுப்பினர் நாகூர்கனி உட்பட ஆறு பேரை தேடிவந்தனர். இந்நிலையில் மூவர் கைது செய்யபட்டனர். இருவர் கோர்ட்டில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த நாகூர்கனி திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.


