/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நிதி மோசடி: ஊராட்சி தலைவரிடம் விசாரணைநிதி மோசடி: ஊராட்சி தலைவரிடம் விசாரணை
நிதி மோசடி: ஊராட்சி தலைவரிடம் விசாரணை
நிதி மோசடி: ஊராட்சி தலைவரிடம் விசாரணை
நிதி மோசடி: ஊராட்சி தலைவரிடம் விசாரணை
ADDED : செப் 24, 2011 09:58 PM
ராமநாதபுரம் : வாலாந்தரவை ஊராட்சி தலைவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக உறுப்பினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, தாசில்தார் சுந்தரமூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சி தலைவர் முனியாண்டி. இவர் ஊராட்சி பணிகளில் முறைகேடு செய்ததாக, சில உறுப்பினர்கள் கலெக்டர் அருண்ராயிடம் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் இவர்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டத்தில், அவர் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. இதனால் உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி, ஆதரவு மற்றும் எதிர்ப்பு விபரங்களை அனுப்பி வைக்க ராமநாதபுரம் தாசில்தாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, துணை தாசில்தார் தமீம் ஆகியோர் முனியாண்டியிடம் விசாரணை நடத்தினர்.


