கோர்ட் அதிகாரம் என்ன? : சுப்ரீம் கோர்ட் விளக்கம்
கோர்ட் அதிகாரம் என்ன? : சுப்ரீம் கோர்ட் விளக்கம்
கோர்ட் அதிகாரம் என்ன? : சுப்ரீம் கோர்ட் விளக்கம்
ADDED : செப் 24, 2011 11:08 PM
புதுடில்லி: குறைந்த பட்ச தண்டனையை ரத்து செய்வதற்கு எந்த கோர்ட்டுக்கும் அதிகாரமில்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
பாஸ்கர் ராவ் என்பவர் 1997ம் ஆண்டில் 200 ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். 'இந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகளாகிவிட்டது. மனுதாரர் குறைந்த அளவு தான் லஞ்சம் வாங்கியுள்ளார். எனவே, சுப்ரீம் கோர்ட் 142வது பிரிவை பயன்படுத்தி இந்த தண்டனையைக் குறைக்க வேண்டும்' என, மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'குறைந்த பட்ச தண்டனையை ரத்து செய்வதற்கு, சுப்ரீம் கோர்ட் உட்பட எந்த கோர்ட்டுக்கும் அதிகாரம் கிடையாது. லஞ்சம் வாங்கியது குறைந்த பணமாக இருப்பினும், இந்த குற்றத்துக்காக அவருடைய வேலை பறிபோனாலும் ஒன்றும் செய்ய முடியாது' என குறிப்பிட்டுள்ளது.


