/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ.,பஸ் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு:சமாதானக் கூட்டத்தில் உடனரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ.,பஸ் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு:சமாதானக் கூட்டத்தில் உடன
ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ.,பஸ் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு:சமாதானக் கூட்டத்தில் உடன
ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ.,பஸ் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு:சமாதானக் கூட்டத்தில் உடன
ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ.,பஸ் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு:சமாதானக் கூட்டத்தில் உடன
ADDED : செப் 25, 2011 12:47 AM
விளாத்திகுளம் : விளாத்திகுளம் டூ எட்டையாபுரம், விளாத்திகுளம் டூ குளத்தூர் ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ.,கட்சி சார்பில் நடப்பதாக இருந்த பஸ் மறியல் போராட்டம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
விளாத்திகுளம் டூ குளத்தூர் ரோடு, விளாத்திகுளம் டூ எட்டையபுரம் ரோடு போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ.,கட்சி சார்பில் பஸ் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விளாத்திகுளம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரெங்கசாமி, முன்னாள் எம்எல்ஏ.,ராஜேந்திரன், இந்திய கம்யூ.,ஒன்றிய செயலாளர் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். சமாதான பேச்சு வார்த்தையில் விளாத்திகுளம் டூ எட்டையபுரம் ரோடு, விளாத்திகுளம் டூ குளத்தூர் ரோடு தரம் உயர்த்தி அமைத்தல் பணி தொடர்பான அறிக்கை விளாத்திகுளம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மேற்படி ரோடுகள் அமைக்கும் பணி வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் துவக்கப்படும் என்று உதவி கோட்டப் பொறியாளர் அச்சுதன் உறுதியளித்ததின் பேரில் பஸ் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இந்திய கம்யூ.,தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


