Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றும்பணியிடம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்

கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றும்பணியிடம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்

கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றும்பணியிடம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்

கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றும்பணியிடம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்

ADDED : செப் 25, 2011 06:10 AM


Google News

விருதுநகர்:தமிழகத்தில் ஆசிரியர் கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றவர்கள், காலிப் பணியிடம் இல்லாததால் தவிக்கின்றனர்.இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை அனுமதித்த காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் பணியிட மாறுதல் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செல்லும்போது, அங்கு காலிப் பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது.நேரடி பணி மாறுதல் பெற்றவர்கள் பணியில் இருப்பதாலும், புதிய நியமனங்களின் மூலம் பணியில் சேர்ந்திருப்பதாலும் சிக்கல் உள்ளது. இதனால், பணியிட மாறுதல் பெற்றவர்கள், சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று, மீண்டும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் உத்தரவு பெற வேண்டிய நிலை உள்ளது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கச் செயலர் கணேசன் கூறுகையில், ''பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், காலிப் பணியிடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கால விரயம், வீண் செலவு, மன உளைச்சலாலும் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us