தி.மு.க. பெண் எம்.பிக்கு கொலை மிரட்டல்
தி.மு.க. பெண் எம்.பிக்கு கொலை மிரட்டல்
தி.மு.க. பெண் எம்.பிக்கு கொலை மிரட்டல்
UPDATED : செப் 27, 2011 09:56 PM
ADDED : செப் 27, 2011 09:44 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா எம்.பி.
ஹெலன்டேவிட்சன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது மொபைல் போனுக்கு நள்ளிரவில் அழைப்பு வந்துள்ளது. அவரது கணவர் டேவிட்சன் போனை எடுத்து பேசிய போது, டில்லியில் இருந்து பேசுவதாகவும், எம்.பி. யிடம் அவசரமாக பேசவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஹெலன் போனை வாங்கியதும் எதிர் முனையில் பேசியவர் தரக்குறைவாக பேசியதோடு டில்லிக்கு வந்தால் தொலைத்து விடுவேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். பின்னர் இந்த எண்ணுக்கு இணைப்பு கிடைக்க வில்லை. இது குறித்து ஹெலன் கொடுத்த புகாரின் பேரில் நேசமணிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


