/உள்ளூர் செய்திகள்/சென்னை/எமகண்டம் முடிந்து வேட்பாளர்கள் மனு தாக்கல்எமகண்டம் முடிந்து வேட்பாளர்கள் மனு தாக்கல்
எமகண்டம் முடிந்து வேட்பாளர்கள் மனு தாக்கல்
எமகண்டம் முடிந்து வேட்பாளர்கள் மனு தாக்கல்
எமகண்டம் முடிந்து வேட்பாளர்கள் மனு தாக்கல்
ADDED : செப் 27, 2011 10:58 PM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், எமகண்டம் முடிந்தவுடன், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்கள், ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்தில், இரண்டு மாவட்டக் கவுன்சிலர்கள், 21 ஒன்றியக் கவுன்சிலர்கள், 61 ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு, வேட்பு மனுத்தாக்கல் நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்றுமுன்தினம் எமகண்டம் முடிந்த பிறகு, பகல் 2 மணிக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சோமசுந்தரம், கணேசன் ஆகியோர் தலைமையில், 20வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் வரதராஜுலு, சுயேச்சையாக குமாரி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதேபோல், தி.மு.க., சார்பில், 21ம் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு, சுந்தரி மனு தாக்கல் செய்தார்.


