பண்ருட்டியில் ரயில் மோதி ஒருவர் பலி
பண்ருட்டியில் ரயில் மோதி ஒருவர் பலி
பண்ருட்டியில் ரயில் மோதி ஒருவர் பலி
ADDED : செப் 27, 2011 11:26 PM
பண்ருட்டி : பண்ருட்டியில் ரயில் மோதி இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி திருவதிகை ஆயில் மில் தெரு பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல், 28.
இவரது மனைவி தீபா, 25. இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி முத்துவேல், 5 மகனும், திவ்யா, 3 என்ற மகளும் உள்ளனர்.இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து இயற்கை உபாதைக்காக கடலூர் - சித்தூர் சாலை அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதிக்குச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ரயில்வே கேட் அருகே சென்று பார்த்த போது அங்கு பலத்த காயங்களுடன் சக்திவேல் இறந்து கிடந்தார்.தகவலறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் ரயில்வே லைனில் செல்லும் போது சக்திவேல் ரயிலில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என கருதி சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிதம்பரம் ரயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


